மும்பையில் 20 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த நான்கு மாத குழந்தைசோலாப்பூர்: மும்பை அருகே சோலாப்பூரில் நான்கு மாத பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மும்பை நகர மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிதி கில்பிலே சாதாரமான வாழ்க்கை வாழ இன்னும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என்று அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தெரிவித்தார்.

அந்த குழந்தைக்கு இடது கரோனரி இதய நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இது மூன்று லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இது உடலுக்கு ஆக்சிஜன் விநியோகித்தை நிறுத்தி மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று கூறினார். இதயத்திற்கு சிறிதளவு ரத்தம் ஓட்டம் மட்டுமே செல்வதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 20க்கும் மேற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது தயார் பிரீத்தி தெரிவித்தார். மேலும் குழந்தையின் எடை வெகுவாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.Daily_News_7412487268448
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.