ஜார்க்கண்டில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினர்ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடு விற்பனை செய்ய சென்ற இரண்டு வியாபாரிகள் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லதேகர் மாவட்டம் ஹெர்கத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான் (வயது 15) ஆகிய வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் அவர்கள் இருவரும் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாய் துணி வைத்து அடைக்கபட்ட நிலையில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கவிடபட்டு இருந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் மாடுகள் எதுவும் இல்லை. எனவே, வியாபார தகராறில் கொலை நடந்ததா அல்லது மாடு திருடும் கும்பல் இந்த கொலை செய்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.