முத்துப்பேட்டை அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைதுமுத்துப்பேட்டை அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துப்பேட்டை அடுத்த செம்பியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி மனைவி அன்னப்பூரணி (68). இவர் கண் பரிசோதனைக்காக தஞ்சையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திருத்துறைப்பூண்டிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் சென்று பாண்டி சத்திரம் பஸ் நிறுத்ததில் அன்னப்பூரணி இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின் திருட்டுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னப்பூரணி கூச்சலிட்டார். பின்னர் அந்த பேருந்தை எடையூர் காவல் நிலையத்துக்கு டிரைவர் ஓட்டி சென்றார். பின்னர் போலீசார் பயணிகளிடம் விசாரித்தபோது அந்த பேருந்தில் பயணம் செய்த சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவராமன் மனைவி சுவாதி (36), இவரது சகோதரியான வேல்பாண்டி மனைவி கண்ணம்மா (32) ஆகியோர் அன்னப்பூரணியிடம் தாலி செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் எடையூர் போலீசார் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.