முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது - பெயருக்கு ஏத்த செயல்!திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் ராஜன்கட்டளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்–பிரேமா தம்பதியின் மகள் அகிலா(வயது26). திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி தோப்படி தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் தசரதசக்கரவர்த்தி(29). அகிலாவும், தசரத சக்கரவர்த்தியும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் சென்று பல்லடம் அங்காளபரமேஸ்வரிஅம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதாக அகிலாவிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு தசரதசக்கரவர்த்தி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தசரதசக்கரவர்த்திக்கும், வேறோரு பெண்ணுக்கும் வருகிற 25–ந் தேதி(வெள்ளிக்கிழமை) 2–வது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அகிலா ஊருக்கு வந்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் அவர், கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் தசரத சக்கரவர்த்தி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் கண்ணகி, அபிராமிசுந்தரி, மீனாட்சி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தசரதசக்கரவர்த்தியை கைது செய்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.