வயிற்றுவலியால் 3 பேர் தற்கொலை போலீசார் விசாரணை -- குடவாசல், வடுவூரில்



குடவாசல், வடுவூரில் வயிற்றுவலியால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் தற்கொலை

குடவாசல் அருகே உள்ள சித்தாடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது80). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் ஆறுமுகம் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் குடவாசல் அருகே உள்ள காப்பனாமங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சிவனேசன் (வயது25). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவனேசன் இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வடுவூர்

வடுவூர் வடபாதி பெரியார் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது50). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குபோட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு சின்னப்பன் இறந்தார். இதுகுறித்து இறந்த சின்னப்பனின் மனைவி தனவள்ளி (48) வடுவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.