சைட் எபக்ட்டை ஏற்படுத்தும் பென்சிடில், கோரக்ஸ் உள்ளிட்ட 300 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!மத்திய அரசின் ஒப்புதல் பெறாத 300க்கும் மேற்பட்ட பக்கவிளைவுகளை உண்டாக்கும் மருந்துகள் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணம் அளிக்கும் வகையில், பென்சிடில் என்ற மருந்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இது உண்மையில் இருமல் மருந்தாகும். இதில் கோடைன் என்ற மருந்துப் பொருளும் இடம் பெறுகிறது.

இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரே மருந்தில் பல்வேறு வகையான நோய்களுக்காக அளிக்கப்படும் பென்சிடில், கோரக்ஸ் போன்ற 300க்கும் மேற்பட்ட கூட்டு கலவை மருந்து விற்பனைக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மாநில அரசுகளின் அனுமதியுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்த 6,000 கூட்டு கலவை மருந்துகளை மறு ஆய்வு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில மருந்துகள் தடை செய்யக்கூடியவை என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் அந்த மருந்துகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதற்கான உத்தரவு வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.