பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு: டீசல் விலை ரூ.1.90 அதிகரிப்புசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், இன்று பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.07-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.90-ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாற்றியமைக்கப்பட்ட விலை நிலவரத்தின்படி டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்ந்து ரூ.59.68க்கு விற்பனை செய்யப்படும். டீசல் விலை ரூ.1.90 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.48.33க்கு விற்பனை ஆகும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.59.13 ஆக அதிகரிக்கும்.  கொல்கத்தாவில் ரூ.63.76 ஆகவும், மும்பையில் ரூ.65.79 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

கடைசியாக கடந்த மாதம் 29-ம் தேதி விலை நிலவரம் மாற்றியமைக்கப்பட்டபோது, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. டீசல் விலை உயர்த்தப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.