தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரண உதவி 33 கோடி தாண்டியது....வீடியோவை பாருங்கள்...தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்வமுடன் ஈடுபட்டது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் பெய்த கன மழையால் 16 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், சென்னை மாநகர், புறநகர் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

வழக்கமாக வெள்ள பாதிப்பு களின்போது அரசும், சில சமூக, தன்னார்வ தொண்டு அமைப்பு களும் மட்டுமே நிவாரணப் பணி களில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சிகள் பெயரளவுக்கு சில இடங் களில் நிவாரண உதவிகளை வழங்குவதோடு நிறுத்திக்கொள் வார்கள். ஆனால், இந்த முறை பெரும்பாலான அரசியல் கட்சிகள் போட்டுக்கொண்டு
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை காண முடிந்தது.

அதிலும் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத் எனும் தொண்டு நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால உதவிகள் வழங்கியதுடன் 33 கோடி செலவில் நிவாரன தொகைகள் மற்றும் உணவு , உடைகள் வழங்கி மனிதநேயத்தால் மக்களை மலைக்க வைத்துள்ளது.

இதில் ஹைலைட் என்ன வென்றால் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தேர்தலில் ஓட்டும் சீட்டும் நோட்டும் கேட்காது என்பதுதான்.

வெள்ள நிவாரணப் பணிகுறித்த பாலிமர் செய்திShare on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.