முத்துப்பேட்டை பஸ்சில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை திருட்டுமுத்துப்பேட்டை அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். முத்துப்பேட்டை அடுத்த வடசங்கேந்தியை சேர்ந்தவர் வீரக்குமார் மனைவி சங்கீதா (24). இவர் நேற்று காலை தனியார் பேருந்தில் தம்பிக்கோட்டை சுந்தரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு குழந்தையுடன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்தபோது அவர் வைத்திருந்த கைப்பையை பார்த்தார். அதில் அவர் வைத்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஸ் பயணிகளிடம் சோதனை செய்தனர். இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த ஒரு சிலரை சந்தேகத்துக்கிடமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.