முத்துப்பேட்டையில் இன்று முதல் 3 நாளைக்கு நகைக் கடைகள் அடைப்பு. சங்க கூட்டத்தில் தீர்மாணம்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அனைத்து நகை வியாபாரிகள் மற்றும் அனைத்து ஆபரணத் தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் நேற்று மாலை புதுக்காளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினரும், முத்துப்பேட்டை சங்க தலைவருமான எஸ்.என்.ஆர்.சி.ராஜசேகர் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் பக்கிரிசாமி பக்தர், நிர்வாகிகள் மனோகரன், மகாலிங்கம், கணேசன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்க நகை மீதான ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாளை (இன்று) வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களுக்கு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து நகைக்கடைகள் மற்றும் அனைத்து நகை ஆபரண தொழில் கூடங்கள் அடைத்து போராட்டத்தில் ஈடுப்படுவது என்று தீர்மாணிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் முகம்மது மைதீன், டி.எஸ்.குமாh,; சேகர், நசூருதீன், மனோகரன், தியாகராஜன், பிரசாத், ராஜேஷ் கண்ணா, அன்பழகன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
முத்துப்பேட்டையில் நேற்று மாலை நடந்த அனைத்து நகை வியாபாரிகள் மற்றும் அனைத்து ஆபரணத் தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், முத்துப்பேட்டை சங்க தலைவருமான எஸ்.என்.ஆர்.சி.ராஜசேகர் பேசினார்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

 

[gallery columns="1" size="full" ids="32822,32823"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.