எஸ்.வி.எஸ். மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் செல்போன்களை கண்டு பிடித்ததால் புதிய திருப்பம்



சின்னசேலம் எஸ்.வி.எஸ். கல்லூரி மருத்துவ மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் போலீசார் அவர்களது செல்போன்களை மீட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளான பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகிய மூவரும் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இவ்வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி அமைந்துள்ள பங்காரம் கிராமத்தில் ஜேசிபி டிரைவர் கார்த்தி மற்றும் மாணவர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் செல்போன்களை அவர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது.

அவர்கள் அளித்த தகவலின் படி அருகில் இருந்த கிணற்றில் இருந்து 3 சிம்கார்டுகளையும் போலீசார் மீட்டு விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். உயிரிழந்த மாணவிகள் பயன்படுத்திய சிம்கார்டுகள் மீட்கப்பட்டது வழக்கிற்கு புதிய திருப்பத்தை தந்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.