டீசல் இல்லாமல் நின்றிருந்த மணல் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் உள்பட 3 பேர் பலிசேலம் அருகே டீசல் இல்லாமல் நின்றிருந்த மணல் லாரி மீது, அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மணல் லோடு ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு மேட்டூருக்கு கிளம்பியது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிப்பாடியைச் சேர்ந்த சவுந்திரராஜன் (22) ஓட்டி வந்தார். கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி அடுத்த நாழிக்கல்பட்டி அருகே வந்த போது, டீசல் தீர்ந்ததால் லாரியை சாலை ஓரம் நிறுத்தினார். நேற்று அதிகாலை 6 மணியளவில் டீசல் பிடித்து வந்து லாரியில் டிரைவர் ஊற்றிக் கொண்டிருந்தார். திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை 2.15 மணிக்கு அரசு பஸ் 25 பயணிகளுடன், சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை, ஆத்தூர் அருகே நாகலூரைச் சேர்ந்த குமார்(45) ஓட்டி வந்தார்.

கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியை கடந்து வந்த போது, சாலையோரம் நின்றிருந்த மணல் லாரி மீது மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். இதில், பெத்தநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த கண்டக்டர் குமார்(46), பயணிகளான பெங்களூர் எல்ஆர் நகரைச் சேர்ந்த லிவீஸ்(35), வெங்கடேஷ்(36) ஆகியோர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் குமார் உட்பட 3 பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் சவுந்திரராஜனை கைது ெசய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.