பேராவூரணி அருகே வியாபாரிக்கு கத்திக்குத்து 3 பேர் மீது வழக்குதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே வியாபாரியை கத்தியால் குத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பேராவூரணி அருகே உள்ள உப்புவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜன் (60). திருச்சிற்றம்பலம் கடைவீதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவிக்கும், உப்புவிடுதியை சேர்ந்த சுதாகர் என்பவரின் தாயாருக்கும் வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் நேற்றுமுன்தினம் கடையில் இருந்த தர்மராஜனை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து தர்மராஜன் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுதாகர், அவரது அண்ணன் முத்து மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.