வாலிபரை கொலை செய்த 4 பேர் கைது நண்பரை கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்கியதாக வாக்குமூலம்வலங்கைமான் அருகே வாலிபரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பரை கொலை செய்ததால் பழிக்கு பழி வாங்கியதாக கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருப்பாட்சிபுரம் புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம். இவருடைய மகன் அரவிந்த்(வயது28). இவருக்கும், வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் அய்யாவு மகன் பாலகுரு(25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி ஏற்பட்ட தகராறில் அய்யாவு தரப்பை சேர்ந்த தினேஷ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அரவிந்த் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி இரவு கடைத்தெருவில் இருந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்த அரவிந்தை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடிவந்தனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வலங்கைமான் வெள்ளாளர் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் பாலகுரு (25), தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்த முத்துவெங்கடாசலம் மகன் குபேரன்(26), சிமிலி மேட்டுத்தெருவை மனோகரன் மகன் வினோத்குமார் (26), சுடுகாடு வழிநடப்பு பகுதியை சேர்ந்த கிருபாகரன்(27) ஆகிய 4 பேரும் அரவிந்தை வெட்டிக்கொலை செய்ததாக வலங்கைமான் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரிடம் நேரில் சரணடைந்தனர். இதுகுறித்து அவர் வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ஆயுதங்கள் பறிமுதல்

எங்களது நண்பர் தினேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தோம். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்தை பழிக்கு பழியாக திட்டமிட்டு கொலை செய்தோம் என்று தெரிவித்தனர். மேலும் இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வலங்கைமான் அருகே உள்ள அணியமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உமாமகேஸ்வரி 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் 4 பேரும் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசாரை ஒரு சிலரை தேடிவருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.