அரசியல் சாசன 44–வது பிரிவை ரத்து செய்ய கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 கோடி கையெழுத்து; ஜனாதிபதியிடம் மனுஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளர் கே.எம்.காதர்மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6, 7–ந் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய நாட்டின் மத சிறுபான்மையினரை மிரட்டுவதற்காக சில சக்திகளால் வலியுறுத்தப்படும் அரசியல் சாசன பிரிவு 44–ஐ நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு, இதனை வலியுறுத்தும் வகையில் 1 கோடி கையெழுத்துக்களை திரட்டி குடியரசு தலைவரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 6 மாத காலமாக 21 மாநிலங்களில் திரட்டப்பட்ட 1 கோடி கையெழுத்துகள் அடங்கிய மனுக்கள் அனைத்தும் 14–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான இ.அகமது எம்.பி. தலைமையில், தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர்மொய்தீன், தேசிய செயலாளர்கள் முகமது பஷீர் எம்.பி., குர் ரம் அனீஸ் உமர், பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., தேசிய துணை செயலாளர் ஆம்பூர் எச்.அப்துல் பாசித் ஆகியோர் அடங்கிய குழுவினர் இதனை அளித்தனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.