காஸாவில் 469 குழந்தைள் படுகொலைபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்கிறோம் என்ற போர்வையில் பாலஸ்தீனர்களை பூண்டோடு அழிக்கும் வகையில் கொடுந்தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இத்தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பலியாகி உள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக வாழ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். எகிப்தின் முன்முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகிவிட்டது.

இந்த நிலையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 9 குழந்தைகளும் அடக்கம் என்கிறது யுனிசெப் அறிக்கை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.