பாஜக பிரமுகர் குல்தீப்... கன்னையா குமார் நாக்கை வெட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் தருகிறேன்டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சங்க தலைவர் கன்னையா குமாரின் நாக்கை வெட்டி விட்டு வாருங்கள், நான் 5 லட்ச ரூபாய் தருகிறேன் பாஜக பிரமுகர் கூறிய கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், படாவன் மாவட்டத்தின் பாஜக யுவ மோர்ச்சா தலைவராக செயல்பட்டு வருபவர் குல்தீப் வார்ஷினி. இவர் நிகழ்ச்சி ஒன்றில்.” அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேச விரோத கோஷங்களை அவர் எழுப்புகிறார். கன்னையா குமார் நாக்கை வெட்டுபவர்களுக்கு நான் 5 லட்ச ரூபாய் தருகிறேன்” என தெரிவித்தார். பாஜக பிரமுகரின் வன்முறையை தூண்டும் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 9–ந்தேதி இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் சிலர் கோஷம் எழுப்பியதாகவும், இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் 12–ந்தேதி தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் கன்னையா குமாருக்கு 6 மாத காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, நேராக, பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய கன்னையா குமார், இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் தேவையில்லை, இந்தியாவுக்குள் சுதந்திரம் தேவை எனவும், நேரடி அரசியலில் ஈடுபடும் திட்டம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.