விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை விற்பனை மீதான தடைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை மீதான மத்திய அரசின் தடைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 10-தேதி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் விக்ஸ் ஆக்‌ஷன் 500, கோரக்ஸ் போன்ற 300 மருந்துகளின் விற்பனைக்கு தடைவிதித்தது. இதனை எதிர்த்து விக்ஸ் ஆக்‌ஷன் 500 மருந்தை தயாரிக்கும் ப்ராக்டர் அண்டு கேம்பிள் (பி&ஜி) நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் சகாய், மத்திய அரசின் உத்தரவிற்கு மார்ச் 21-ம் வரை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். தடையை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மற்ற மருந்து நிறுவனங்களின் வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து 21-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

கோரக்ஸ் சிரப் மற்றும் அப்போட் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் மூலம் இடைக்கால தடையை பெற்றுள்ளன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.