ரஷ்யாவின் தெற்கு பிராந்திய நகரான ரோஸ் ஆன் டவ் என்ற நகரில் உள்ள விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி அதிகாலை பிளைய் துபாய் என்ற விமானம் ஒன்று துபாயில் இருந்து 55 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகளுடன் ரோஸ்டவ் ஆன் டவ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
அப்போது, மூடுபனி காரணமாக ஓடு பாதை சரிவர தெரியாததால், விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் தீ பிடித்து புகை மண்டலமாக அந்த இடம் முழுவதுமாக காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னும் உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியப்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானத்தை துபாய் ஏர்லைன்ஸ் நிறுவனமும் டுவிட்டர் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.