திருச்சி அருகே உள்ள மஞ்சைக்கோரையில் நாகூர் சென்ற வேன் மரத்தில் மோதியதில் 5 பேர் பலிதிருச்சி அருகே மஞ்சைக்கோரையில் வேன் மரத்தில் மோதியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மஞ்சைக்கோரையில் சேலத்தில் இருந்து  நாகூர் தர்காவிற்கு உறவினர் மற்றும் நண்பர்களுடன்  4 வேன்களில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது திருச்சி, முசிறி மஞ்சைக்கோரை அருகே வேன்கள் வந்தபோது ஒரு வேன் மட்டும் நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த வேனில் பயணம் செய்த 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த முசிறி போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் உடன் வந்திருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் காணப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.