இந்து பாரம்பரிய படி மந்திரங்கள் முழங்க நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு!!!.. வீடியோ இணைப்புஉ பி மாநிலம் லக்னோவில் நடந்த நாய் திருமணத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு தடல் புடல் விருந்தும் படைக்கப்பட்டது.
கவுசாம்பி மாவட்டம் பவாரா கிராமத்தில் ஜங் பகதூர் என்பவர் செல்லமாக பெண் நாய் வளர்த்து வந்தார். ஷாகுனியா என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த நாய்க்கு உரிய வயது வந்து விட்டதால் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இது போல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நண்பர் வளர்த்த நாய்க்கு திருமணம் செய்து வைக்க பேசப்பட்டது .
இதனையடுத்து இன்று அந்த கிராமத்தில் திருமணம் இந்து பாரம்பரிய படி மந்திரங்கள் முழங்க முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டது தொடர்ந்து ஷாகுனியா பெண் நாய் ஆண்நாய் பசந்த் திரிபாதியுடன் காரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு மக்கள் புடை சூழ நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர். பலரும் தங்களில் மொபைலில் படமெடுத்து தள்ளினர் .


பின்னர் திருமணத்தில் பங்கேற்க வந்த இந்திய கலாசார விருந்து அளித்து அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் . பெண் நாயை வளர்த்த ஜங் பகதூர் கண்ணீர் பொங்கிட திருமண ஜோடியை வழி அனுப்பி வைத்தார் .

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.