திமுக – முஸ்லீம் லீக் தொகுதி உடன்பாடு – முஸ்லிம் லீக்கிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுசட்டப்பேரவை களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேலையில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு வேலைகளில் ஒவ்வொரு கட்சியும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது தி.மு.க.

இந்த தொகுதிப் பங்கீடுக்கான பேச்சு வார்த்தை தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான குழுவுக்கும் காதர் முஹைதீன் தலைமையிலான குழுவிற்கும் இடையே கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

முஸ்லிம் லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் அது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் முடிவு செய்தபின் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த காதர் முஹைதீன் “தி.மு.க உடனான தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிவடைந்தது. 8 தொகுதிகள் வேண்டுமென்று கேட்டோம். 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு மகிழ்ச்சியே” என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.