திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுமனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் ஐதர் அலி மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை 5மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம் வந்தனர். அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி, ஜவாஹிருல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:   வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் மமக இடம்பெற்று, இன்று தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.எந்தெந்த தொகுதி என்பது குறித்து தொகுதி பங்கீட்டு குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் முடிவாகும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வளர்ந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்.   இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ மீது சட்டப்படி நடவடிக்கை மு.க.ஸ்டாலின் பேட்டி

பின்னர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘தேமுதிக உடன் கூட்டணி சேர திமுக சார்பில் ரூ.500 கோடி பேரம் பேசியதாக வைகோ கூறியிருப்பதாக கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ‘‘கூட்டணிக்கான பேச்சுவார்த்தையே நடக்கவில்லை. நடந்திருந்தால் வைகோ கூறியது உண்மையாக இருந்திருக்கலாம். பேச்சுவார்த்தையே நடக்காத போது எப்படி கூற முடியும். இந்த குற்றச்சாட்டுக்கு விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பதில் கூறியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. இதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். - See more at:
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.