அமீரகத்தின் "அஜ்மான்" அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 5 பேர் காயம்- படங்கள் இணைப்பு.ஐக்கிய அரசு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் மிகச்சிறியது, அஜ்மான் ஆகும். இது துபாயில் இருந்து 14மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள சோவான் பகுதியில், 12 பிரிவுகளாக 3 ஆயிரம் வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில்,வானைத் தொடும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டவை ஆகும்.


அந்த பிரிவில் ஒன்றின் பக்கவாட்டில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென தீப்பற்றியது. இந்த தீ மின்னல் வேகத்தில் பிற பிரிவுகளுக்கும் பரவி எரியத்தொடங்கியது.


உடனடியாக ஷார்ஜா மற்றும் அஜ்மான் சிவில் பாதுகாப்பு படையினரும், தீயணைப்பு படையினரும்,போலீஸ் படையினரும் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.


தீ விபத்து நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து மக்களை பத்திரமாக வெளியேற்றினர். பல மணி நேரம் போராடிய பின்னர்தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.


இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. இருந்தபோதிலும் 5 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோன்று தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் சுவாசிக்க முடியாமல் பலர் திணறினர். அவர்களும் மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.


தீப்பிடித்து எரிந்த பகுதிகள் பூமியில் சிதறி விழுந்ததை காட்டும் காட்சிகள், ‘டுவிட்டர்சமூக வலைத்தளத்தில் வெளியாகின. தீவிபத்தை நேரில் கண்டவர்கள், 8–வது பிரிவில் தீப்பிடித்து அது 6–வது பிரிவுக்கு பரவியதாக கூறினர்.


நேற்று காலையில் தீயினால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.


இந்த தீ விபத்து அஜ்மானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதே போன்றதொரு தீ விபத்து, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துபாயில் உள்ள 63 மாடி சொகுசு ஓட்டலில் நேரிட்டதும், அது 20 மணி நேரம் தொடர்ந்து எரிந்ததும், 16 பேர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தகுந்தது.


3180070881 3343668353268223761
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.