தஞ்சை அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ. 60 கோடி மோசடி: கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்தஞ்சை அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி செய்த தந்தை மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் சுப்பையனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

சாலியமங்கலம் அருகே, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த தந்தை, மகன் 2 பேரும் இணைந்து அடகுகடை நடத்தி வந்தனர். பின்னர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இதனால் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் தலா ரூ.1 லட்சம், ரூ.1½ லட்சம் என டெபாசிட் செய்தோம். அதற்கு அவர்கள் வட்டியும் கொடுத்தனர். இந்த நிலையில் நிதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் திடீரென மூடப்பட்டது. நாங்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் ரூ.60 கோடி வரை டெபாசிட் செய்திருந்தோம்.

நிதி நிறுவனத்தை நடத்தியவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அய்யம்பேட்டை போலீஸ் நிலையம், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.