தாஜூநிசாவின் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சுதிருவாரூர் அருகே உள்ள வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் தாஜூநிசா(வயது60). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நெல் அரவை மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தார். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த தோடு, மூக்குத்தி, தங்க சங்கிலி உள்ளிட்ட 6 பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவாரூர்¢ தாலுகா போலீசில் தாஜூநிசா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு தாஜூநிசா வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.