அசாத்தியமான திறமையால் தேர்தல் தூதுவரான 7 வயது சிறுமி!சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாம் இருப்பது எந்த தொகுதி என பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருக்கும் நிலையில், 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 234 தொகுதிகளையும் மனப்பாடமாக கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி யார்? என்பதை தெரிந்து கொள்வோம்..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விளாநல்லூர் ஊராட்சி ஒன்றி‌ தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ப்ரீத்தி, தனது அசாத்தியமான நினைவாற்றலால் அனைவரையும் அசத்தி வருகிறார். தமிழகத்தின் 234 சட்டப்பே‌ரவைத் தொகுதிகளின் பெயர்களையும்‌ மா‌வட்ட வாரியாக இவர் கூறி பார்ப்பவர்களை அசத்துகிறார்.

ப்ரீத்தியின் இந்த அசாதாரணமான நினைவாற்றலால், செய்யாறு தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்கிறார். மேலும், ப்ரீத்தியை செய்யாறு தொகுதி தேர்தல் தூதுவராக சார் ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

எனவே செய்யாறு தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய அத்தொகுதி தேர்தல் அதிகாரிகளுடன் சிறுமி ப்ரீத்தியும் கைகோர்த்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.