பரிசு விழுந்திருப்பதாக கூறியதால் பேஸ் புக் நண்பரை நம்பி ரூ.7.6 லட்சம் இழந்த பெண்!பரிசு விழுந்திருப்பதாக கூறியதால் பேஸ் புக் நண்பரை நம்பி 7.6 லட்சம் பணத்தை பெண் ஒருவர் பரிகொடுத்தார். பிம்ப்ரி, வைபவ்நகர் பகுதியை சேர்ந்தவர் நீனா முலானி(51), இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ் புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த பிரின்ஸ் ஏஞ்சலோ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பேஸ் புக்கில் இருவரும் அடிக்கடி பேசி தங்களது கருத்தை பறிமாறிக் கொண்டனர். பிப்ரவரி 15ம் தேதி விலையுயர்ந்த பரிசு ஒன்று உங்களுக்கு விழுந்திருக்கிறது என்று கூறிய பிரின்ஸ் சீக்கிரத்தில் அது உங்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

அதனை நீனாவும் உறுதியாக நம்பினார். அதன் பின் பரிசு பொருள் சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்கியிருப்பதாகவும் அதற்கான பணம் செலுத்தினால் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் பிரின்ஸ் கூறினார். அதன்படி பிம்ப்ரியில் உள்ள கோ-ஆபரேடிவ் வங்கியில் பிப்ரவரி 22ம் தேதி  ரூ.7.6 லட்சம்  பணத்தை செலுத்தினார்.

நீனா அதே வங்கியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். வெகு நாட்கள் ஆகியும் பரிசு பொருள் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் பிம்ப்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீாசர் இந்திய தண்டனைச் சட்டம் 420, மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.