பல்லால் வேனை இழுத்து 9-ம் வகுப்பு மாணவர் ஹக்பீல் சாதனைராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த 14 வயது மாணவர் கயிறு மூலம் வேனை கட்டி பல்லால் இழுத்து சாதனை படைத்தார்.

கீழக்கரை பேர்ல் மாண்டிசோரி மெட்ரிக். பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹக்பீல். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 3 டன் எடை கொண்ட மகேந்திரா வேனை கையால் இழுத்து சாதனை புரிந்தார்.

இதை முறியடிக்கும் வகையில் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில் வேனை கயிற்றில் கட்டி அதை பல்லால் 70 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்தார்.

இது குறித்து கராத்தே மாஸ்டரும் பயிற்சியாளருமான கண்ணன் கூறியதாவது:

தமிழக அளவில் 14 வயது மாணவர் யாரும் செய்யாத சாதனையை ஹக்பீல் சாதித்துள்ளார். மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். பிரவுன் பெல்ட் பெற்ற இந்த மாணவர் அடுத்த கட்டமாக பிளாக் பெல்ட் செல்ல உள்ளார். இவரது சாதனையை சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

100 மீட்டர் தூரம் இலக்கு வைத்து வேனை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலை சரியாக இல்லாததால் 70 மீட்டர் தூரம் வேனை இழுத்து மாணவர் சாதித்தார். 14 வயதில் இந்த சாதனை நிகழ்த்தி இருப்பது அந்த மாணவரின் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் தான் என்றார்.

மாணவர் ஹக்பில் கூறும்போது, அடுத்த கட்டமாக தேசிய கராத்தே போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

என்னுடைய இந்த சாத னைக்கு தந்தை பசீர் மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறார். எனது கராத்தே மாஸ்டர் கண்ணன் அளிக்கும் சிறப்பான பயிற்சி எனது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களின் வாழ்த்துக்களுடன் மேலும் பல சாதனைகளை படைப்பேன் என்றார்.

சாதனை மாணவரை சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவுது, தாசிம்பீவி மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா, பள்ளி முதல்வர் ஜாகிரா பானு மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.hag_2784651f
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.