நாங்கள் முஸ்லிம்களை வேலைக்கு எடுப்பதில்லை: மோடி அரசின் AYUSH அமைச்சகம்ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றின் சுருக்கமே AYUSH. இந்த அமைச்சகம் கடந்த 2015 இல் நடத்திய உலக யோகா தினத்தில் எத்துனை முஸ்லிம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்ற தகவல் அறியும் உரிமை விண்ணப்ப கேள்விக்கு அரசு கொள்கையின் படி முஸ்லிம்களை பணியமர்த்துவதில்லை என்று அந்த அமைச்சகம் பதிலைத்துள்ளது.
கடந்த வருடம் நடந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆசிரியர்கள் மற்றும் பயிர்ச்சியாளர்கள் தேர்வில் எத்துனை முஸ்லிம்கள் பணியில் எடுக்கப்பட்டனர் என்ற கேள்வி திரு.புஷ்ப் ஷர்மாவினால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலாளிக்காமல் காக்கவைத்த அரசை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அடுத்தடுத்து பல விண்ணப்பங்களை அனுப்பி இறுதியில் பதிலை பெற்றார். அந்த பதிலில் தான் AYUSH அமைச்சகம் நாங்கள் அரசு விதிமுறைப்படி முஸ்லிம்களை பணியில் அமர்த்துவதில்லை என்று கூறியுள்ளது.
மேலும் அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கையில். மொத்தம் 711 யோகா பயிர்ச்சியாளர்கள் குறுகிய கால வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்ததாகவும் அதில் எவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட கூட இல்லை என்றும் 26 இந்துக்கள் பயிற்சியாளர்களாக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டனர் என்றும் ஆயுஷ் அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும் இந்த பதிலில் 3841 முஸ்லிம்கள் அக்டோபர் 2015 வரை யோகா பயிற்சியாளர் பதவிக்கு வின்னபித்ததாகவும் அதில் எவருமே தேர்வு செய்யப்படவில்லை என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு காரணமாக ஆயுஷ் அமைச்சகம் கூறியதாவது, ” அரசு விதிப்படி எந்த ஒரு முஸ்லிம் விண்ணப்பதாரரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவோ, தேர்வு செய்யப்படவோ, வெளிநாட்டிற்கு அனுப்பப்படவோ இல்லை” என்று கூறியுள்ளது.
இது குறித்து புஷ்ப் ஷர்மா கருத்து தெரிவிக்கையில் “நடக்கும் மோடி அரசின் மதவாத அஜெண்டா தான் அரசு பணியிடங்களிலும் கூட இந்த அளவிற்கான மதவாத வெறுப்பு சிந்தனைகள் பரவ காரணம், இது அனைவருக்கும் தெளிவாகவே தெரியக்கூடிய ஆனால் நிரூபிக்க சிரமமான ஒன்று. இதோ நம்மிடம் மோடி அரசு முஸ்லிம்களை அரசு பணியில் அமர்த்துவதில்லை என்று அவர்கள் வெட்கமில்லாமல் பதிலளித்த கடிதம்” என்று கூறியுள்ளார். மேலும் ஒரு சிறு அமைச்சகத்தில் இந்த நிலை என்றால் இது மற்ற துறைகளில் எந்த அளவிற்கு பரவியிருக்கும் என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.