இஷ்ரத் வழக்கு: போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது



இஷ்ரத் ஜகான் வழக்கில் குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

குஜராத்தில் கடந்த 2004–ம் ஆண்டு, அப்போதைய முதல்–மந்திரி நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., இது ஒரு போலி என்கவுண்ட்டர் எனக்கூறி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால் மும்பை தாக்குதல் வழக்கில் சமீபத்தில் வாக்குமூலம் வழங்கிய தீவிரவாதி டேவிட் ஹெட்லி, இஷ்ரத் ஜகான் ஒரு லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதி என கூறியிருந்தார். டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை அடுத்து குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வாதிட்டபோது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ். தாகூர் மற்றும் யு யு லலித் அடங்கிய பெஞ்ச், “இதனை பட்டியலிடுங்கள், இவ்விவகாரத்தை பின்னர் பார்ப்போம்,” என்று கூறிஉள்ளது.

டேவிட் ஹெட்லியுடைய வாக்குமூலமானது இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தீவிரவாதி தான் என்பது முடிவாகிஉள்ளது என்று சர்மா கூறிஉள்ளார். குஜராத் போலீஸ் டி.ஐ.ஜி. டி ஜி வான்சாரா உள்பட போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டரில் அவர்களுக்கு உள்ள தொடர்பு விவகாரமாக மராட்டியத்தில் விசாரணையை எதிர்க்கொண்டு வருகின்றனர். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க சிறையில் இருக்கும் தீவிரவாதி டேவிட் ஹெட்லி வீடியோ கான்ப்பரன்ஸ் மும்பை சிறப்பு கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்கையில்,

இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிதான் என்று கூறிஉள்ளான். இஷ்ரத் ஜகான் உடன் கொல்லப்பட்ட 4 பேரும் தீவிரவாதிகள் தான் என்ற மறுக்க முடியாதாக உண்மையானது வெளியாகி உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.