விபத்தில் சிக்கியவர்களுக்கு இனி போலீஸ் பயம் இன்றி உதவலாம்: உச்ச நீதி மன்றம்Savelife ஃபவுண்டஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொதுநல வழக்கில் 2014 ஆம் ஆண்டு 4 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதில் 1.39 பேர் இறந்துள்ளதாகவும் கூறியிருந்தது.

பெரும்பாலான விபத்துகளில் காயம் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்ல மக்கள் தயங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காவல்துறையினரின் விசாரனை. அதனால் இது போட்ன்ர உயிரிழப்புகளை தவிர்க்கும் புதிய சட்ட வரைவு ஒன்று விரைவில் அமுலுக்கு வர உள்ளது.

இதன் படி ஒரு விபத்தை நேரில் பார்த்த சாட்சி உட்பட விபத்து நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகு தன்னை குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் அங்கிருந்து செல்லலாம். காவல்துறையினர் அவரை பற்றிய விபரங்களை வற்புறுத்தி வாங்க இயலாது. ஆனால் அந்த நபர் தானே விருப்பப்பட்டு கொடுத்தால் காவல்துறையினர் அதனை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் காவல்துறையினர் அவரிடம் எந்த கேள்விகளும் கேட்கக் கூடாது. அந்த நபர் அவரது வாக்குமூலத்தை பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும். காயம் பட்டவருக்கு உதவியவர் மற்றும் மருத்துவமனையில் சேர்த்தவர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற காவல்துறை வற்புறுத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாட்சியங்கள் நேரடியாக நீதிமன்றதிற்கு வந்து சாட்சி கூற விரும்பினால் ஒரே அமர்வில் அவரிடம் சாட்சி விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.

இந்த சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.