தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக கூட்டணியில் தேமுதிக வா?தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

திமுக கூட்டணியில் சேருவதற்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அவருக்கு 59 இடங்கள் வரை வழங்குவதற்கு திமுக ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் இன்று காலை முதலே செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும், இந்த தகவல்களை இரு கட்சிகளுமே உறுதிப்படுத்தவில்லை.

தேமுதிகவுடனான கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவர்கள் 90 இடங்கள் வரை கேட்ட நிலையில், 59 இடங்கள் வரை தருவதற்கு திமுக ஒத்துக்கொண்டுள்ளது என திமுக தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன.

தேமுதிகவுடனான கூட்டணியை உறுதி செய்யும் பணியில் சன் குழுமத்தின் கலாநிதி மாறன் பிரதானமாக செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், தேமுதிகவுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படமாட்டாது. அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு மாநகராட்சி மேயர் பதவிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 28 இடங்களை வென்றது. பிரதான எதிர்கட்சியான திமுகவைவிட அதிக இடங்கள் பெற்றதால், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.