”பாரத் மாதா கீ ஜெய்” என்று கூற வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கும் கூறவில்லை”--ஓவைசிஎன் தொண்டையின் மீது கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜெய் கோஷத்தை  உச்சரிக்க போவது இல்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசத்துரோக கோஷங்கள் எழுப்பட்டதாக புகார் எழுந்தையடுத்து, இது குறித்து கடந்த மார்ச் 3 ஆம் தேதி பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்,  பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை இளைய சமூகத்தினர் எழுப்ப வேண்டும்  என்று சொல்வதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. இது உண்மையாகவும் தன்னெழுச்சியாகவும் இளைஞர்களின் அனைத்து துறை வளர்ச்சியில் ஒன்றாக இருக்க வேண்டும்” என கூறியிருந்தார்.


இந்த நிலையில் மோகன் பகவத்தின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி கூறியதாவது:-  இந்த கோஷத்தை (பாரத்  மாதா கீ ஜெய்) நான் எழுப்ப போவது இல்லை. எனது  கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினால் கூட நான் இதை கூற மாட்டேன்” என்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த மக்கள் கரவொலியை எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஓவைசி,  பாரத் மாதா கீ ஜெய் என்று கூற வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கும் கூறவில்லை”என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.