கன்னையா குமார் தேச விரோத கோஷமிட்டதாக முறைகேடான வீடியோவை ஒளிப்பரப்பிய டி.வி. நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குகன்னையா குமார் தேச விரோத கோஷமிட்டதாக முறைகேடான வீடியோவை வெளியிட்ட மூன்று டி.வி. நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் தேச விரோத கோஷமிடுவது போன்ற வீடியோவை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டன. இதனை தொடர்ந்து கன்னையா குமார் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.

டெல்லி அரசு, கன்னையா குமார் தேச விரோத கோஷமிடுவது போன்ற வீடியோக்களை பரிசோதனைக்கு அனுப்பியது. சோதனையின் முடிவில் அந்த வீடியோக்கள் திருத்தப்பட்டு இருப்பதும், முறைகேடாக சில கோஷங்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து முறைகேடான வீடியோவை ஒளிப்பரப்பிய மூன்று டி.வி. நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர டெல்லி ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.