வர‌ வர‌ சீனி(சர்க்கரை) கசக்குதையா....வர‌ வர‌ சீனி(சர்க்கரை) கசக்குதையா....
காலையில் எழுந்ததும் காஃபி குடிக்கலேன்னா எனக்கு தலைவலி வந்துடும். வேலையே ஓடாது என்று சொல்பவர்கள் நிறைய‌ பேரை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அந்த‌ இன்ஸ்டண்ட் காஃபித் தூள் தான் உங்களுக்கு தலைவலி வருவதற்கே முழுமுதற் காரணம் தெரியுமா?
முதல்ல‌ அதை நிறுத்திப் பாருங்க‌. இதுக்கு நம்ம‌ வனியே சாட்சி.
முன்னதாக‌, நாம் காஃபிக்கு தாராளமாக‌ அள்ளிப் போடும் சர்க்கரை. இது ஒரு வெள்ளை நச்சு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
கரும்புச் சாற்றை கொதிக்க‌ வைத்து பாகு காய்ச்சி அப்படியே உருண்டையாகவோ அல்லது அச்சில் வார்த்தாலோ அது வெல்லம். இது ஆரோக்கியமானது.
ஆனால், முதலில் ஆலைகளில் கரும்புச் சாற்றை வெண்மையாக்க‌ நாம் பாத்ரூமை க்ளீன் செய்ய‌ பயன்படுத்தும் ப்ளீச்சிங் பௌடரை கலக்கிறாங்க‌. இது உள்ளுறுப்பை அரிக்கும் தன்மை உடைய‌ பொருள்.
சாறு கொதித்த‌ பின் ஒரு லிட்டருக்கு 200 மில்லி என்ற‌ அளவில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இது உரம் தயாரிக்க‌ பயன்படும் பொருளாகும்.
தொடர்ந்து அழுக்கை நீக்க‌ சுண்ணாம்பு, சல்பர் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. இந்த‌ சல்பர் டை ஆக்சைடு ஒருவித‌ நச்சுத் தன்மை வாய்ந்தது.
மீண்டும் சுத்தப்படுத்த‌ பாலி எலக்ட்ரோலைட், காஸ்டிக் சோடா சேர்த்து படிக‌ நிலையை அடைய‌ சோடியம் ஹைட்ரோ சல்பேட் சேர்க்கப்படுகின்றது.
இத்தனை கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டு ஆரோக்கியமான‌ வெல்லத்தை படிக நிலையில் வெள்ளைச் சர்க்கரையாக‌, இல்லையில்லை சக்கையாகத் தருகிறார்கள்.
இந்தச் சர்க்கரையை சீரணிக்க‌ நம் உடலில் ஏற்கனவே உள்ள‌ கால்சியம் உறிஞ்ச‌ப்படுகின்றது.
இனிய‌ தோழிகளே,
வெல்லம் ஒரு கிலோ ரூ.70
அதை க்ரிஸ்டல் ஆக்கி வெண்மையாக்கி பலப்பல‌ பிராஸஸ் செய்து பெறப்படும் சர்க்கரை கிலோ ரூ. 35
எப்படி இது சாத்தியம்?
அப்படியானால், நாம் வாங்கும் ஒரு கிலோ சர்க்கரையில் அரைக் கிலோவுக்கும் அதிகமாகவே கெமிக்கல் கலந்திருப்பதாக‌ அர்த்தம் அல்லவா.
சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
வெல்லம் கூட‌ பழுப்பு நிறம் மாறி அதி வெண்மையாக‌ கிடைத்தால் சோடியம் ஹைட்ரோ சல்பேட் சேர்க்கப்பட்டு இருப்பதாக‌ அர்த்தம். (இவ்வாறு வெல்லப்பாகில் டின்டின்னாக‌ கொட்டுவதை நான் உறவினரின் வயலில் சிறுவயதிலே பார்த்திருக்கேன்)
ஆனால், பனைவெல்லம் அப்படியல்ல‌. இதில் பூச்சிக்கொல்லியோ, ரசாயன‌ உரமோ கிடையாது. ஆரோக்கியமானது. ஆனால், பதனீரை பாகு காய்ச்சி கருப்பட்டியாக‌ மாற்றும் போது சர்க்கரையை கலக்கும் அநியாயமும் இப்போது புதிதாக‌ ஆரம்பித்துள்ளது.
ஒரு கிலோ பனை வெல்லம் ரூ. 180.
சர்க்கரை விலை உங்களுக்குத் தெரியும். இதனால் தான் இந்தக் கலப்படம் ஆரம்பித்துள்ளது. கவனமாகப் பார்த்து வாங்குங்க‌.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.