உலகின் முதல் டெங்கு தடுப்பூசி அறிமுகம்மனிலா (பிலிப்பைன்ஸ்): டெங்கு நோய்க்கான உலகின் முதல் தடுப்பூசி பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு நோயில் இருந்து விடுபடுவது பெரும் சவாலாக இருந்த நிலையில், “தேவைகள் உள்ள இடத்தில் கண்டுபிடிப்புகள் பிறக்கும்” என்பதற்கு இணங்க உலகின் முதல் டெங்கு நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து மருத்துவ துறையில் மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது மனித இனம்.

ஆசிய நாடுகளில் பெரும் சவாலாக இருப்பது டெங்கு நோய். இந் நோய்க்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு வந்தனர். எனினும் இந்த நோயின் தாக்கம் குறைந்த பாடில்லை.

மனித இனத்துக்கு பெரும் சவாலாக இருந்த இந்த நோய், சுமார் 120 நாடுகளில் அதாவது உலக மக்கள் தொகையில் பாதியை கொண்டிருக்கும் நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 110,000-க்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு வரும் அதே சமயம், ஆசிய நாடுகளில் 70 சதவீதம் பேரும், உலகளவில் 67 மில்லியன் மக்களும் இந் நோயால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை 50 சதவீதமாக குறைக்க உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், சனோஃபி எனும் மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி பிரிவான “சனோஃபிபாஸ்டியர்”, டெங்கு நோய்க்கு தீர்வு கண்டுள்ளது. இந்நிறுவனம் “டெங்வேக்ஸியா” எனும் தடுப்பூசியை கண்டுபிடித்து, அதனை முதன்முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது.

9 முதல் 45 வயது வரையுள்ள அனைத்து வயதுடையோரை தாக்கும் 4 வகையான டெங்கு நோய்களுக்கும் இந்த தடுப்பூசி மூலம் தீர்வு காணலாம் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.