திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவி கர்ப்பம்: வாலிபர் மீது புகார்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பூசலாங்குடி மேலத் தெருவை சேர்ந்த சவுந்தர் ராஜன் மகன் பொன்ராஜ் (வயது 22). வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவி ஒருவரை பின் தொடர்ந்து சென்று அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற பொன்ராஜ் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது மிரட்டி, பொன்ராஜ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த மாணவி, தான் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் படியும் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே தனது தாய், தந்தையிடம் மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை அறிந்த பொன்ராஜ் மாணவியை சந்தித்து கர்ப்பத்தை கலைத்து விடுமாறும் மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் கண்ணகி, அபிராமி சுந்தரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.