தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அமிதாப் பச்சன் மீது புகார்-- வீடியோ இணைப்புதேசிய கீதத்தை தவறாக பாடியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார்.

அதேபோல், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர். தொடர்ந்து போட்டி முடியும் வரை சச்சின் தெண்டுல்கர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருடன் சேர்ந்து அமிதாப் பச்சன் விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார்.

இந்நிலையில், போட்டியின் போது அமிதாப் பச்சன் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அவர் மீது டெல்லி அசோக் நகர் காவல்நிலையத்தில் உல்காஸ் என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக கபடி லீக் போட்டியின் போதும் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், தேசிய கீதத்தை ஒரு நிமிடம் 22 நொடிகள் வரை அதிக நேரம் எடுத்துக் கொண்டு பாடியதாகவும் அதில் உல்காஸ் புகார் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் 52 நொடிகள் மட்டுமே பாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர் புகார் அளிப்பதற்கான நோக்கம், பெரிய நடிகரான அமிதாப் தன்னுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.

இது விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அவர் புகார் கடிதம் எழுதியுள்ளார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.