உலக வினோதம்: மூக்கில் முளைத்த மீசைஉலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆராய்ச்சி ஒன்றில், உலகில் சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதால் அதிகப்படியான சீனர்களும், இந்தியர்களும் மரணம் அடைவதாக புள்ளி விவரம் வெளியானது. இதையடுத்து சீனாவில் சுத்தமான காற்று பற்றி விழிப்புணர்வு பிரசாரம் உடனடியாக தொடங் கப்பட்டு உள்ளது.

'வைல்டுஎய்டு சீனா' எனும் தொண்டு நிறுவன அமைப்பு, புதுமையாக சித்தரித்து வெளியிட்டு உள்ள வீடியோ காட்சி ஒன்று நாட்டு மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. நாசித்துவாரங்களில் இருந்து ரோமம், மீசைபோல முளைத்திருப்பதுபோல அந்த வீடியோ காட்சிகள்  உள்ளன.

சுவாசிக்கும்போது மூக்கினுள் செல்லும் காற்றை தூசியின்றி வடிகட்டி அனுப்பும் பணியில் சிறுரோம இழைகளும் பங்காற்றுகின்றன. தற்போது காற்றில் அதிகமாக மாசுகள் கலந்திருப்பதால், எதிர்காலத்தில் சுத்தமான காற்றை வடிகட்ட உதவும் ரோமங்கள் அதிகமாக வளர வேண்டியதிருக்கும் என்பதை சித்தரிப்பதாகவே இந்த மூக்குமீசை வீடியோ அமைந்துள்ளது.

ஏராளமானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மூக்குமீசை விளம்பரத்தால், சுத்தமான காற்று பற்றிய விழிப்புணர்வு எழுந்தால் நல்லது!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.