சுதந்திர போராட்ட வீரர் அப்துல் ஹமீது பாகவி! ஓர் வரலாற்று பார்வை!..26-11-1876ல் சேலம் ஆத்தூரில் பிறந்த இவர், ஹாஜி காதிர் முஹ்யத்தீன் இராவுத்தர் அவர்களின் புதல்வராவார். கிலாபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் உச்ச கட்டத்திலிருந்த போது திண்டுக்கல் நகரை தலைமையகமாகக் கொண்டு அதன் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தவர். திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டவர். கதர் அணியாத திருமணங்களுக்கு செல்வதில்லை என்று காந்திய கொள்கையை உறுதியாகப் பின்பற்றியவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார். மதுரை டவுண்ஹாலில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற மதுவிலக்கு பொது கூட்டத்தில் இரண்டு மணிநேரம் வீறு கொண்டு பேசினார். இவர் பேசிய பிறகு வேறெந்த பேச்சாளரும் பேசுவதற்கு பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கினார். சிறப்பாக பேசும் ஆற்றலாளரான இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் தமிழக வருகையின்பொழுது அவர்களின் உருது சொற்ப்பொழிவை தீந்தமிழில் மொழிப்பெயர்த்தார்கள். இவர் ஈரோட்டில் நடந்த கிலாபத் மாநாட்டிலும் பங்கேற்றார். இவரது “இயற்கை மதம்” நூலுக்கு ஈ.வெ.ரா. முன்னுரை எழுதியுள்ளார். 1955 ஜூன் 23ல் காரைக்காலில் காலமானார்.
இரண்டாம் நிலை ஆதார நூற்கள்:

 

1. ஏ.ஷேக் தாவூத், ‘இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு’ பக்கம் 65-66

 

2. செ.திவான், ‘விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்’ 1993, பக்கம் 181-182
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.