மகாராஷ்டிராவில் வறட்சியால் கஷ்டப்படும் விவசாயிகளை துன்பத்தில் ஆழ்த்தும் மாட்டிறைச்சி தடைமாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுகிறது. 70 சதவீதத்திற்கு அதிகமான கிராமங்களில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பல கிராமங்களில் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். விவசாயிகள் வறட்சி காலங்களில் மாடுகளை இறைச்சிக்கு விற்றுவிட்டு, மழைக்காலத்தில் மீண்டும் புதிதாக வாங்கிக்கொள்வது வழக்கம். இதன் மூலம் வறட்சியை சமாளிப்பதுடன் பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மாட்டிறைச்சி தடை காரணமாக மகாராஷ்டிரா விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்க முடியாமலும், அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க முடியாமலும் தடுமாறி வருகிறார்கள்.

ராஜீவ் சவுத்ரி என்ற விவாசாயி கடந்த ஆண்டு ரூ.40 ஆயிரத்திற்கு தான் வாங்கிய காளை மாடுகளை பாதிவிலைக்கு விற்க தயாராக இருந்தும் அவற்றை வாங்க ஆள் இல்லை என்று கூறியுள்ளார். நாங்கள் உயிர் பிழைப்பதை விட மாட்டிறைச்சி மீதான தடைதான் முக்கியமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் மாடுகளை அனாதையாக விடப்படும் சூழல் நிலவுகிறது.

மாட்டிறைச்சி தடைக்கு பிறகு அனாதையாக விடப்பட்ட சுமார் 2.5 லட்சம் மாடுகள் முகாம்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சுமார் 40 லட்சம் கால்நடைகள் தனித்துவிடப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே கைவிடப்படும் அனைத்து மாடுகளையும் முகாம்களில் வைத்து பராமரிப்பது இயலாத காரியம்.

இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வைச் சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ் “விவசாயிகளின் நலன் தான் முக்கியம், எனவே அவர்களுக்கு உதவும் வகையில் மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.