தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் எதிரொலி: தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனைசென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே உள்ள கட்டவுட்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடனே, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. ஆரம்பிக்கப்பட்ட 10 நமிடங்களிலே 3 புகார்கள் பெறப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி நேற்று தெரிவித்துள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளது. பொதுவாக, விதிமுறை மீறல்கள் தொடர்பாக புகார்களட அளிக்க வேண்டுமென்றால் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்றிலிருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட புகார்களானது தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த புகார்கள் பெரும்பாலானவை பேனர்கள் அகற்றப்படவில்லை, இன்னும் அரசு விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் இருக்கிறது இதை அகற்றப்படவில்லை. இதுபோன்ற புகார்கள் தான் அதிகமாக வந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய தினங்கள் பொருத்தவரைக்கும் இன்னும் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை பொருத்தவரைக்கும் வாகன சோதனையானது இன்னும் பெருமளவில் தொடங்கவில்லை, தற்போதுதான் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த ஆசோசனை கூட்டத்தின் இறுதி முடிவே வாகன கண்காணிப்பானது அமைக்கப்படும். தற்போது வீடியோ கேமராக்கள் பெறப்பட வேண்டும். அதாவது ஒவ்வொரு வாகன சோதனை செய்யும் வாகனத்திலும் வீடியோ கேமரா மேன்கள், கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் இதுபோன்ற உத்தரவு தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான ஏற்பாடு செய்வது குறித்து தான் ஆசோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சென்னையில் வாகன சோதனையானது முழுமையாக முழுவீச்சில் ஈடுபடும். தற்போது சுவர் விளம்பரங்களை அழிக்கும் வேலை சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விரைவில் ராஜேஷ் லகானி மீண்டும் ஒரு வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை நடத்த உள்ளார். அந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் தெரிவிக்க வேண்டிய முடிவுகள் எல்லாம் விளக்கம் அளிக்க உள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.