அதிரையில் உப்பு உற்பத்தி தொடங்கியதுஅதிரை கடற்கரையை ஒட்டி 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி செய்வதற்கு முதல் கட்டப்பணிகள் துவங்கியது. பாத்தி கட்டுதல், பாத்தி சீர்அமைத்தல், பாத்தி மிதித்தல், கட்டை போடுதல், கடல் வாய்க்கால் சீரமைத்தல், கடல் வாய்க்கால் வண்டல் அகற்றுதல், கடல் முகத்துவாரம் சீர் அமைத்தல், போன்ற பணிகள் முடிந்து கடல் நீரை பாத்தியில் பாய்ச்சும் பணி முடிவடைந்து உப்பளங்களில் விளைந்த உப்பை வாரும் பணி துவங்கி உள்ளது.

இதில் அதிரையிலுள்ள அனைத்து உப்பளங்களிலும் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது. இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் செல்வராஜ் என்பவர் கூறுகையில், மழைக்காலம் முடிந்து உப்பளங்களில் தேங்கி உள்ள மழைநீரை பம்ப் செட் உதவியுடன் வெளியேற்றி மூன்று மாதங்களாக முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது நேற்று முதல் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.