அங்கே அடித்தால் இங்கே வலிக்கும்!உடலும் உள்ளமும்

ஊர்ப் பக்கத்தில் பொறாமை குணம் கொண்டவர்களை ‘அவன் வயித்து வலிக்காரன்பா’ என்பார்கள். இதையே இப்போது மனித உடலில் ஏற்படும் வலிக்கும் அவர்களது மனநிலைக்கும் நேரிடையாக தொடர்பு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர் உளவியலாளர்கள். நாட்பட்ட வலிகளுக்கு உடலில் ஏற்படும் காயங்கள் மட்டுமல்ல... உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளும் காரணமாகின்றன. மருத்துவ சிகிச்சைகளோடு மனதுக்கும் சிறிது சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையே உடல் வலிகள் மனிதனை எச்சரிப்பதாகச் சொல்கின்றன ஆராய்ச்சிகள். அதன்படி...

தலை

‘ஸ்ட்ரெஸ்’... இந்த வார்த்தையை உச்சரிக்காத மனிதனே கிடையாது. ஒருவர் கடுமையான ஒற்றைத்தலைவலி மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணி மன அழுத்தமே. மன அமைதி பெற ஒவ்வொரு நாளும் தனக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். தோள்கள்

‘குடும்பப் பாரத்தை தோளில் சுமக்கிறான்’ என்று சொல்வார்களே. உண்மைதான்... ஆய்வாளர்களும் அதையேதான் சொல்கிறார்கள். தோள்களில் ஏற்படும் வலி, நீங்கள் சுமக்கும் கவலைகளை எடுத்துச் சொல்லும். உங்கள் குடும்பத்தாரிடமோ, நண்பர்களிடமோ உங்கள் கவலைகளைப் பகிருங்கள்!

கீழ் முதுகு

நிதி சம்பந்தமான கவலைகளே கீழ் முதுகு வலிக்கு முக்கிய காரணம். நிதி மேலாண்மையில் கவனமாக இருங்கள். உங்கள் பொருளாதார தகுதிக்கு மீறிய திட்டங்களில் இறங்க வேண்டாம்.

இடுப்பு

சூழ்நிலை மாற்றங்கள், புது அலுவலகம், ஊர், வீடு போன்ற இடம் பெயர்தல்களால் உண்டாகும் பயம் மற்றும் மிகப்பெரிய முடிவுகளை எடுக்கும் போது வரும் பயம் போன்றவற்றால் இடுப்பு வலி வருகிறது. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதை ஏற்றுக்கொண்டு அதை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்!

முழங்கால்

முழங்கால் வலி உள்ள ஒருவரை, அவரது சுயநலம் மற்றும் கர்வ குணத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். எப்போதும் தான் செய்வது மட்டும் சரி, தன்னைப் பற்றிய சிந்தனை என இருப்பவர்களுக்கு பெரும்பாலும் முழங்கால் வலி வருகிறது. சமூகத் தொண்டுகள் செய்து மற்றவர்கள் சிரிப்பில் மகிழ்ச்சியைக் காணுங்கள்!

கணுக்கால்

எப்போதும் சோகமாக இருப்பவர்களுக்கு கடுமையான கணுக்கால் வலி உண்டாகும். உங்கள் சோகத்திலிருந்து வெளிவந்து சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்!

கழுத்து

மன்னிக்கும் பக்குவம் இல்லாததையே கழுத்து வலி குறிக்கிறது. அது உங்களை நீங்களே மன்னிப்பதாகவோ, மற்றவர்களை மன்னிப்பதாகவோ இருக்கட்டும். மற்றவர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது விரும்பும் விஷயங்களை மற்றவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதைப் பற்றி சிந்தியுங்கள்!

மேல் முதுகு

உணர்வுபூர்வ ஆதரவின்மையே மேல் முதுகு வலிக்கு காரணம். பாராட்டுகள், சின்னச் சின்ன உணர்ச்சி பரிமாறல்கள் ஒரு மனிதனுக்கு பக்கபலமாக இருப்பவை. மணமானவர்களாக இருந்தால் உணர்வுகளை உங்கள் துணையுடன் பரிமாறிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சீக்கிரம் துணையைத் தேடிக் கொள்ளுங்கள்!

முழங்கை

சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாதவர்களுக்கு முழங்கை மற்றும் முன்னங்கை பகுதிகளில் வலி இருக்கும். உடன் இருப்பவர்களுடன் அனுசரிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

கைகள்

எந்நேரமும் தனிமையை விரும்புவோருக்கே கைகளில் வலி உண்டாகிறது. குறுகிய வட்டத்தைவிட்டு வெளியே வந்து நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.

கெண்டைக்கால்

மனச்சோர்வு, கவலை மற்றும் பொறாமை போன்றவையே கெண்டைக்கால் வலிக்கு காரணமாகின்றன. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படுவதை விட்டு, நம்மை அவர்கள் நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் செயலில் இறங்குவதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளலாமே!

பாதங்கள்

தீவிரமான பாதவலிக்கு காரணம் அதிக மன அழுத்தம். உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஏதோ ஒரு விஷயத்தை உடனே தொடங்குங்கள்.

நன்றி குங்குமம் டாக்டர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.