இந்தியா முழுவதும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதே பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். திட்டம்: கெஜ்ரிவால் சாடல்காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பா.ஜ.க.வின் இந்த முடிவுக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்தியா முழுவதும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த விரும்புகின்றன. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.