ஏ.டி.எம்.மில் கருவியை பொருத்தி திரைப்பட முறையில் கொள்ளையடிக்க முயன்ற வெளிநாட்டு வாலிபர் கைதுஏ.டி.எம்.மில் கருவியை பொருத்தி நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம்.மில் கருவி
சென்னை கிண்டி அண்ணா சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் வித்தியாசமான கருவி ஒன்று இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

வெளிநாட்டு வாலிபர் கைது
அப்போது வாலிபர் ஒருவர், ஏ.டி.எம்.மில் இருந்த கருவியை எடுக்க வந்தார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், ருமேனியா நாட்டைச் சேர்ந்த இருமியாயூனேடா (வயது 33) என்பது தெரியவந்தது,

சமீபத்தில் வெளி வந்த ஒரு திரைப்படத்தில் ஏ.டி.எம்.மில் ‘சிம்மர்’ என்ற கருவியை வைத்து பணம் எடுப்பவர்களின் ஏ.டி.எம். கார்டு எண்களை ரகசியமாக திருடி வேறு கார்டு மூலம் பணத்தை எடுப்பது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

அதேபோல் இங்கு இருந்ததால் ருமேனியா நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் பேசும் மொழி புரியாததால் விசாரிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ருமேனியா நாட்டு மொழி தெரிந்தவர்களை அழைத்து விசாரித்தால் தான் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.