சாதி, மத வெறி தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கைசமூக வலை தலங்களில் சாதி, மத வெறி தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜகுரு தலைமையில்  நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் வீரமணி, மாநில  மாணவர் மன்ற முன்னாள் துணை செயலாளர் துரை.அருள்ராஜன், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள 55 கிளைகளிலும் இளைஞர் பெருமன்ற கொடி ஏற்றுவது. உடுமலைப்பேட்டையில் காதலர்களை வெட்டிய சம்பவத்திற்கு மூல காரணமாணவர்கள், தூண்டியவர்கள், அதற்கு துணை போகின்ற சக்திகள் அனைவரயும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும். மனித நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தொடரும் சாதி வெறி, மதவெறி தீண்டாமை கொடுமைகளுக்கும், சாதிய ஆணவ கொலைக்கும் முடிவு கட்ட வேண்டும்.

இதை வலியுறுத்தி பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23ம் அன்று மன்னார்குடியில் கருத்தரங்கம் நடத்துவது. சமூக வலைதளங்களில் சாதி, மத வெறியை தூண்டும் வகையில் பேசியும், எழுதியும் விளம்பரம் செய்தும் வருகின்ற சமுக விரோத கும்பல்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.