சோசியல் இஞ்சினியரிங்: தொலைபேசி ஹாக்கர்கள்சோசியல் எஞ்சினியரிங் கேள்வி பட்டதுண்டா? ப்ரோக்ராம்மிங் அறிவு எதுவும் இல்லாமலேயே வெறும் தொலைபேசி அழைப்புகள் அல்லது உரையாடல்கள் மூலம் ஒருவரை ஹாக் செய்வது. அதற்கான சிறிய உதாரணம் கீழே வீடியோவில். உங்களுடைய தகவல்கள் உங்களுக்கு எவ்வளவு சிறியதாக அல்லது முக்கியமில்லாததாக தெரிந்தாலும் விபரம் தெரிந்தவர்களின் கைகளில் சிக்கிக்கொண்டால் நீங்கள் சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து உங்களக் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் போல் பேசி உங்களது முகவரி போன்ற தகவல்களை பெறுவதாக இருக்கட்டும். அதார் அட்டையில் உங்கள் வங்கி கணக்கை சேர்த்துள்ளதை சரி பார்க்க அழைக்கின்றோம் என்று கூறி உங்கள் வங்கி கணக்கை பெறுவதாக இருக்கட்டும், ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீங்கள் அறிந்திடாத வகையில் உங்களை பலவழியில் ஏமாற்ற முடியும்.
இதில் இருந்து தப்பிப்பது எப்படி?
நமக்கு வரும் அழைப்புகளில் யாரேனும் நம்மை குறித்த தகவல்களை கேட்டால் அவரை சந்தேகத்துடனேயே அணுகுங்கள். அவர் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் சரி. குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்து உங்களை அழைக்கின்றேன் என்று கூறினால் அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் அந்த அலுவக எண்ணிற்கு (உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணுக்கு அல்ல) நீங்களே தொலைபேசியில் அழைத்து விபரம் கேளுங்கள். சமூக வலைதளங்களில் உங்களை குறித்த தகவல்களை அதிகம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் புதிதாக வாங்கிய வாகனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள உங்களது வாகன பதிவு எண்களாக இருக்கட்டும், உங்கள் வீட்டு cctv காமிராவின் படங்களாக இருக்கட்டும், உங்களை குரிவைப்பவர்களுக்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். வங்கி தொடர்பான எந்த விஷயங்களையும் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளாதீகள். முடிந்தவரை வங்கிக்கு நேரில் சென்றுவிடுங்கள்.

இந்த வீடியோ எவ்வளவு எளிதாக ஒருவரை சோசியல் இஞ்சினியரிங் ஹாக் மூலம் ஏமாற்ற முடியும் என்று உங்களுக்கு உணர்த்தும். 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.