தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு முத்துப்பேட்டை வர்த்தக்கழகக் கூட்டத்தில் பாராட்டு. 


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் இரா.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கௌரவ தலைவர் இரா.திருஞானம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் சங்கத்தின் மாதாந்திர செயற்பாடு குறித்து பேசினார். பொருளாளர் மு.முகைதீன் பிச்சை நிதிநிலை அறிக்கை வசித்தார். முன்னதாக துணைச் செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். கூட்டத்தில் சென்ற வாரம் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகர் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள மணல்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.ஹைதர் அலி, எஸ்.ராஜேஷ் கண்ணா, சகாபுதீன், எம்.செல்வம், பி.பாலகுமார், எம்.நூருல் அமின், ஹகீம், கோவிந்தராஜ், தாவூது அடுமை, பன்னீர் செல்வம் மற்றும் முஹம்மது சஃப்வான் மரைக்காயாா் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் பழனிதுரை நன்றி கூறினார்.

படம் செய்தி:
முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழுக் கூட்டத்தில் சென்ற வாரம் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


 

முத்துப்பேட்டை  மு.முகைதீன்பிச்சை


 

[gallery size="large" columns="1" ids="32569,32570,32571,32572"]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.